#நீலகிரி_மாவட்டத்துக்கு_ரெட்_அலெர்ட் ⛔🔴🔴சென்னை வானிலை ஆய்வு மையம்பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு கோவை செல்ல உள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்இதனால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.அதே சமயம், தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிககனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவைக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு செல்ல உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு கோவை செல்ல உள்ளது என தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதுவங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதுஅதேபோல வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகாவில் மிக, மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதிகளில் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Book cab service:

Ooty local sightseeing

Airport pick up and drop

Ph.8072728891

Www.ootynigeltravels.com

Category: News Updates

Add Comment

Your email address will not be published. Required fields are marked *