“ஊட்டிக்கு ஒரு நாளுக்கு 100 சுற்றுலா மட்டும் வரலாம் ”
மாவட்ட ஆட்சியர் …..

   உலக பிரசித்தி பெற்ற  சுற்றுலா தளம்  மலைகளின் அரசி  ஊட்டி ..

.சுற்றுலா தொழிலை நம்பி நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான குடும்பகங்கள் வாழ்ந்து வருகின்றன …
கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று உலகை கவ்வி கொண்டிருக்கும் தருணம் … நீலகிரியை இந்த பெரும்தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா மத்திய , மாநில அரசுகள் பொது ஊரடங்கை அறிவிப்பதற்கு முன் மார்ச் 17 ஆம் தேதியே நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை சீல் செய்தார் … ஒரு சுற்றுலா கூட நீலகிரியில் இருக்கக்கூடாது என்று இருபத்தி நாலு மணிநேரத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர் . அதானால் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாக்களும் கட்டாயமாக வெளியேறவேண்டி இருந்தது … மாவட்ட ஆட்சியர் பெரியளவில் கொரோனா தொற்றில் இருந்து நீலகிரியை கண்ணும் கருத்துமாக காத்துவந்தார் …. பின்னர் சில தளர்வுகள் மற்றும் அத்து மீறி வெளியூர் சென்று வந்தவர்களால் தொற்று ஏற்பட்டு பரவ ஆரம்பித்தது … அதையும் அதிரடி நடவடிக்கைகளால் கட்டுக்குள் வைத்திருந்தார் ..
நீலகிரி படுக இன கிராமமக்கள் எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றாமல் இருந்ததின் விளைவு தொற்று அதிகமாகியது … செப்டம்பர் மாதம் மத்திய அரசும் …நம் தமிழக அரசும் மேலும் நிறைய தளர்வுகளை அறிவிக்க மக்கள் வெளியூர் சென்று வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை … சுற்றுலா தலங்கள் திறக்கலாம் என்று அரசு அறிவிப்பை வெளியிட … நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா, ” பூங்காக்கள் மட்டும் திறக்கப்படும் அளவான சுற்றுலாக்கள் மட்டும் அனுமதிக்க படுவார்கள் என்றும் உள்ளூர் வாசிகளை தவிர வெளியூர் வாசிகள் இ பாஸ் இல்லாமல் வர முடியாது” என்ற உத்தரவை பிறப்பித்தார் …
சுற்றுலாக்கள் என்ற பேரில் … தினமும் ஐய்யாயிரம் பேர் இ பாஸ் அப்பளை செய்ய ஆரம்பித்து விட்டனர் … இவ்வளவு பேரை அனுமதித்தால் மேலும் கொரோனா தொற்று அதிகமாகலாம் என்று தற்போது ஒரு நாளுக்கு 100 இ பாஸ் தான் வழங்கப்படும் ..அதுவும் முதல் அப்பளை செய்பவர்களுக்கு மட்டும் என்ற உத்தரவை ஆட்சியர் அறிவித்துள்ளார் ..
நாம் திறந்திருக்கும் சுற்றுலா பூங்காக்களை விகடகவிக்காக ஒரு ரவுண்டு அடித்தோம் …., ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு சென்றோம் …உலக புகழ் பொட்டானிகள் கார்டன் வெறிச்சோடி காணப்பட்டது … சுற்றுலாக்களின் வருகை இல்லாததால் புல் தரை பச்சைபசேலென காட்சி அளிக்கிறது … இரண்டாவது சீசன் பூக்கள் பூத்து குலுங்குகிறது ..பூங்கா பணியாட்கள் இரண்டாவது சீசனை முன்னிட்டு பூச்சட்டிகளை அடுக்குவதும் மற்றும் காய்ந்த இலைகளை அப்புறப்படுத்துவதில் படு பிசி …. யார் பூங்காவினுள் வந்தாலும் சானிடைசேர் கொண்டு கைகளை கழுவி பின் தெர்மல் டெம்பெறச்செர் எடுத்த பின் தான் உள்ளே அனுமதி …நாமும் அனைத்து முன்னெச்சரிக்கையை எடுத்த பின் தான் உள்ளே சென்றோம் …
கன்னியாகுமரியில் இருந்து வந்த லாரன்ஸ் குடும்பத்தாரை சந்தித்து பேசினோம் ,” கடந்த ஆறு மாதமாக எங்கேயும் போகாமல் உடல் ரீதியாகவும் மன ரீதியாக மிகவும் ஏகப்பட்ட அழுத்தம் …. எங்க ஊரிலே சுற்றினால் அதுவும் என் குடும்பத்தாருக்கு போர் …அதனால் சுற்றுலா தலங்கள் திறப்பு மற்றும் இ பாஸ் கொடுக்கிறார்கள் என்ற செய்தியை டிவியில் பார்த்தோம் முதலில் அப்பளை செய்கிறவர்களுக்கு உடனே கிடைத்து விடும் … அதிலும் இத்தனை நாள் கார்டன் மூடப்பட்டிருந்ததால் ரொம்பவே பிரெஷாக இருக்கும் என்பதால் இன்று வந்தோம் …. நாங்கள் மட்டும் தனியாக கார்டனை பார்ப்பது திரில்லிங் …. ஒரு விஷயம் ஒரு நாள் விடுதிகளில் தங்க அனுமதி இருந்தும் ..எங்கேயும் ரூம் தர தயங்குகிறார்கள் அது தான் தலைவலி ஊட்டி மிகவும் சுத்தமாக இருக்கிறது …. இனி யாரும் வெளிநாடுகளை தேடி செல்லவேண்டாம் … ஊட்டி ..ஏற்காடு ..கொடைக்கானல் போய் வந்தாலே போதும் ..அதுவும் இங்கு கலெக்டர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் …. அதனால் கொரோனா கூட மிக குறைவு என்பது நிம்மதியான ஒன்று …. இத்தனை நாளுக்கு பின் மனசு நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது …. அடுத்து ரோஸ் கார்டன் செல்கிறோம் … ஊட்டியில் எங்கும் உணவு தான் சரியில்லை ” என்று நகர்ந்தனர் அந்த சுற்றுலா குடும்பம் ….
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த பத்து வருடமாக பணிபுரிந்து வரும் போட்டோக்ராபர் ஷெரிப் , ” என்னை போன்ற பல புகைப்பட காரர்கள் நீலகிரி சுற்றுலா தலங்களில் வேலை செய்து வருகிறோம் … சீசன் சமையத்தில் ஒரு நாளைக்கு 500 அல்லது 600 ரூபாய் வருமானம் கிடைக்கும் … இப்பொழுது வரும் சுற்றுலாக்கள் கையில் செல்போன் இல்லாமல் வருவது இல்லை …அவர்களே போட்டோ எடுத்து கொள்வதால் எங்களின் தொழில் ஏற்கனவே பாதித்து வந்தது … மார்ச் மாதம் லாக் டவுன் வந்தவுடன் ..எங்களின் வாழ்க்கையில் இடி விழுந்தது போல இருந்தது … கஷ்டப்பட்டு ஒரு லட்சம் சேர்த்து வைத்தேன் …அது செலவு ஆகிவிட்டது … தற்போது கார்டன் ஓபன் என்றவுடன் நேற்று தான் உள்ளே வந்தோம் ஒரு வருமானமும் இல்லை … இன்று ஒரு குடும்பம் என்னிடம் ஊட்டி நிலவரம் குறித்து பேசினார்கள் …என் கதையை கேட்டு ..ஒரு படம் எடுத்து கொண்டார்கள் …. பார்க்கலாம் கடவுள் விட்ட வழி ..மீண்டும் தொழிலுக்கு வருவோமா என்று கூட எதிர்பார்க்கவில்லை …. சுற்றுலா தலங்களுக்கு அனுமதி என்ற செய்தி ஆறுதலாக இருந்தது ….இடிந்து போய் இருந்த எங்களுக்கு ஒரு ஆறுதல் ” என்று கண்கலங்கி ஒரு சுற்றுலாக்குடும்பத்தை நோக்கி நடையை கட்டினார் தன் காமிராவுடன் ….
கடந்த மே மாதம் ஊட்டி சீசன் முழுமையாக நடத்த படவில்லை …செப்டம்பர் மாதம் இரண்டாவது சீசன் நடத்தப்படுமா ? என்ற கேள்வி எழுந்தது ..லாக் டவுன் தளர்வுகள் அறிவித்தவுடன் .. சுற்றுலா தலங்களில் உள்ள பூங்காக்களை திறக்கலாம் என்று அரசு அறிவித்தவுடன் .. நீலகிரி ,கொடைக்கானல் ,ஏற்காட்டிற்கு சுற்றுலாக்கள் செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் இ பாஸ் எடுக்கவேண்டும் என்ற நிபந்தனையை மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்தியத்தின் பேரில் ..சுற்றுலாக்களுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
நீலகிரிக்கு வரும் சுற்றுலாக்களின் கூட்டம் மொய்க்க ஆரம்பிக்க நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்வியா ..ஒரு நாளைக்கு 100 பேர் மட்டும் தான் அனுமதிக்க படுவார்கள் என்று கூறிவிட்டார் ..அதில் முதலில் யார் அப்பளை செய்கிறார்களோ அவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார் ..இதை தொடர்ந்து …
கடந்த வாரம் 11 -9 -2020 அன்று இரண்டாவது சீசனை மூன்று ஐ .எ .எஸ் அதிகாரிகள் துவக்கி வைத்தனர் . நீலகிரியில் தற்போது மூன்று பெண் ஐ .எ .எஸ் அதிகாரிகள் முக்கிய நிர்வாக பொறுப்பில் உள்ளனர் என்பது ஒரு சிறப்பான ஒன்று .. மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா .. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாகு மற்றும் ஊட்டி ஆர் .டி.ஓ (ஊட்டி உதவி ஆட்சியர்) மோனிகா ராணா ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர் … இந்த நிகழ்வில் .. எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …. இப்படி பட்ட ஒரு நிகழ்வு நடப்பது பற்றி யாருக்கும் தெரியாது …காரணம் கொரோனா …!
அடுத்து நம்முடைய விசிட் நூற்றாண்டு நினைவு ரோஸ் கார்டன் .. அங்கும் கூட்டம் இல்லை … அப்துல் குடும்பத்தை சந்தித்தோம் , ” வழக்கமாக நான் மட்டும் ஊட்டி வருவேன் … இந்த மாவட்டத்தில் வளரும் பழங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து வியாபாரத்தை செய்கிறோம் ..இந்த முறை என் ஊட்டி விசிட் ஒரு சுற்றுலாவாக … என் குடும்பத்தார் உடன் வந்துள்ளனர் ..இ பாஸ் உடனே கிடைத்து விட்டது ஒரு நாள் தான் எங்க ரௌண்டப் தங்கும் ஐடியா இல்லை … இத்தனை நாள் லாக் டவுனில் வீட்டில் முடங்கி இருந்த குழந்தைகளுக்கு புது உட்சாகம் … ஒரு விஷயம் கூட்டமே இல்லாத ஊட்டி மற்றும் கார்டனை சுற்றி பார்ப்பது நமக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம் ..வருடம் முழுவதும் கூட்டம் மொய்க்கும் ஊட்டி காலியாக இருப்பதை இப்பொழுது தான் பார்க்கிறோம் … கூட்டத்தில் எதையும் ரசிக்க முடியாது … இப்பொழுது நிதானமாக எல்லாவற்றையும் ரசித்து விட்டு கோவை செல்வோம் ” என்று ரோஸ் கர்டெனுள் சென்றனர் அந்த குடும்பம் …
நாம் பெர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக கார்டன் பக்கம் தலையை காட்டினோம் …. ஒரு ஆள் இல்லை … இந்த கார்டன் ஊட்டி நகரை விட்டு சற்று தொலைவில் மற்றும் மறைவாக இருப்பதால் புதிய சுற்றுலாக்களுக்கு தெரியவில்லை … அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் விசிரித்தோம் ..ஏன் டூரிஸ்ட் யாரும் வரவில்லை என்று …” இ பாஸ் ஒரு பிரச்சனை …அதை ஓகே பண்ணி வந்தாலும் எங்க கர்டெனுள் நுழைய சரியான ஆவணங்கள் இல்லை அதனால் யாரும் அவ்வளவாக வருவதில்லை ..இன்னும் தளர்வுகள் வந்தால் தான் சுற்றுலாக்கள் சுதந்திரமாக வர முடியும் …என்று கூறுகின்றனர் ..
நாம் ஊட்டி பொட்டானிக்கல் கார்டன் ..உதவி தோட்டக்கலை அலுவலர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசினோம் , ” ஆறு மாதத்திற்கு பின் அரசு உத்தரவின் பேரில் நம்ம அரசு தாவரவியல் பூங்கா திறக்கப்பட்டது .. சுற்றுலாக்கள் இ பாஸ் பெற்று வருகின்றனர் .. மாவட்ட ஆட்சியர் ஒரு நாளைக்கு 200 அனுமதிக்கலாம் … ஐம்பது பேர் ஒரு மணிநேரம் பூங்காவை சுற்றி பார்க்கலாம் .. வழக்கமான கொரோனா கட்டுப்பாடுகளுடன் தான் சுற்றுலாக்கள் உள்ளே நுழைய முடியும் …கடந்த பதினோராம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இரண்டாவது சீசன் துவக்கி வைக்கப்பட்டது … ஏழாயிரம் பூத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன ..2 .3 லட்சம் பூக்கள் பூத்து குலுங்கும் காட்சியை சுற்றுலாக்கள் கண்டு களிக்கலாம் . கண்ணாடி மாளிகை திறந்து இருக்கும் அதில் பத்து பேர் அனுமதித்து அவர்கள் சுற்றி பார்த்தபின் அடுத்த பத்து பேர் அனுமதிக்க படும் ..மே மாதம் மலர் காட்சி நடத்த முடியவில்லை …. அடலீஸ்ட் இரண்டாவது சீசனுக்கு கார்டன் திறந்தது ஒரு ஆறுதலான ஒன்று ” என்று முடித்தார் ..
லாக் டவுன் சமையத்தில் சில தளர்வுகளை சாதகமாக பயன்படுத்தி சுற்றுலாக்கள் மாவட்டத்தினுள் அத்து மீறி நுழைந்த சம்பவங்களும் நடைபெற்றன … இதை பார்த்த மாவட்ட ஆட்சியர் சுற்றுலாக்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பான நடவடிக்கை எடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளார் என்பது உண்மை …
தளர்வுகள் வந்திருந்தாலும் கொரோனா அச்சம் இந்த மலை மாவட்டத்தில் அதிகமாக தொற்றி கொண்டுள்ளது … என்னதான் சுற்றுலாக்களுக்கு இ பாஸ் கொடுத்தாலும் அவர்களின் வருகை குறைவு தான் … வழக்கமாக வருடம் முழுவதும் சுற்றுலாக்களின் கூட்டம் நீலகிரியை மொய்த்துவிடும் … இந்த வருடம் கொரோனா அனைத்திற்கும் ஏகப்பட்ட தடையை பிரயோகித்து விட்டது ..இனி கொரோனாவின் தாக்கம் முற்றிலுமாக மறைந்தால் தான் ..நீலகிரி போன்ற சுற்றுலா தலங்களில் சீசன் களை கட்டும்………

-ஸ்வேதா அப்புதாஸ்..

Book cab service

Ooty local sightseeing

Coonoor sightseeing

Pykara sightseeing &mudumalai wildlife tiger reserve

Coimbatore airport pick up and drop

ph.8072728891

Www.ootynigeltravels.com

Category: News Updates

Add Comment

Your email address will not be published. Required fields are marked *